கொழும்பில் 14 மாடி குடியிருப்பிலிருந்து தவறி விழுந்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு
கொழும்பு 09, மருதானை பகுதியில் உள்ள 14 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து தவறி விழுந்த 12 வயது சிறுவன் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு 09, மருதானை காவல்துறை பிரிவுக்குட்பட்ட 14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பொன்றிலிருந்து தவறி விழுந்த 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, குறித்த சிறுவன் குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில் மேலும் சில சிறுவர்களுடன் சுற்றுப்புறக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, திறந்தவெளிப் பகுதியிலிருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த சிறுவன் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.