மேல் மாகாணத்தில் தீவிரமடையும் டெங்கு – 14 நாட்களில் 15,856 நோயாளர்கள் பதிவு
ஜூலை மாதத்தின் முதல் 14 நாட்களில் நாட்டில் 15,856 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், மேல் மாகாணத்தில் டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து இன்று(16) முதல் 40 சுகாதார அதிகாரிகள் பிரிவுகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன.
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவிப்பின்படி, நாட்டில் ஜூலை மாதத்தின் முதல் 14 நாட்களில் மட்டும் 15,856 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். குறிப்பாக மேல் மாகாணத்தில் டெங்கு பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், கம்பஹா மாவட்டத்தில் அதிகளவிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில், 'Clean Sri Lanka ' வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (2026.07.16) முதல் மேல் மாகாணத்தின் 40 சுகாதார அதிகாரிகள் பிரிவுகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.