மகாவலி ஆற்றில் மூழ்கி மாயமான 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு
கம்பளை வெலிகல்ல–உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி மாயமான 15 வயது சிறுவன், இரண்டாவது நாள் தேடுதலின் பின்னர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல–உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போனார். சம்பவத்தைத் தொடர்ந்து பிரதேசவாசிகளும் கம்பளை பொலிஸாரும் இணைந்து உடனடியாக தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
கடற்படையின் சுழியோடிகள் (Divers) உதவியுடன் தீவிர தேடுதல் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பிற்பகலில் சிறுவனின் சடலம் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது.
சடலம் முதற்கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்குப் பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளது. பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.