கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 17 ரூபாவால் அதிகரிப்பு – இன்று முதல் அமுல்
பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை கிலோவுக்கு 17 ரூபாவால் அதிகரித்துள்ளன. புதிய விலை இன்று (29) முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன் தாக்கம் தொடர்பில் கலந்துரையாட அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமை (31) கூடவுள்ளது. பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுகளின் விலைகளை அதிகரிப்பது குறித்து அன்றைய தினம் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை கிலோ கிராம் ஒன்றுக்கு 17 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பேக்கரி உற்பத்திகளின் விலைகளிலும் மாற்றம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்த்தப்பட்ட கோதுமை மாவின் விலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு எதிர்வரும் திங்கட்கிழமை (31) கூடவுள்ளது.
அன்றைய கூட்டத்தில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆராய்ந்து, பாண் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.