ரூபா. 2 மில்லியன் செலவில் களுவாஞ்சிக்குடி சக்கடத்தார் வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

களுவாஞ்சிக்குடி சக்கடத்தார் வீதியின் புனரமைப்புப் பணிகள் ரூ. 2 மில்லியன் செலவில் இன்று (18) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன. முதல் கட்டமாக வடிகால் வசதிகள் அமைக்கப்பட்டு, பின்னர் முழுமையான வீதி புனரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபா. 2 மில்லியன் செலவில் களுவாஞ்சிக்குடி சக்கடத்தார் வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

களுவாஞ்சிக்குடி சக்கடத்தார் வீதியின் புனரமைப்புப் பணிகள் இன்று (2026.07.18) ரூபா 2 மில்லியன் செலவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அபிவிருத்தித் திட்டத்தின் முதல் கட்டமாக, வீதிக்கான வடிகால் (Drainage) வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத்தில் வீதியின் முழுமையான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வேலைத்திட்டத்தை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் கலந்துகொண்ட அப்பகுதி மக்கள், நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டமைக்கு தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் இருந்த முக்கிய வீதிகளில் ஒன்றான சக்கடத்தார் வீதிக்கான பணிகள், மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையைத் தொடர்ந்து தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திட்டத்தின் ஆரம்ப கட்டத்திற்காக ரூபா 2 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்டத்தில் தரமான வீதி அமைக்கும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்படும் என்றும் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார். அதேவேளை, களுவாஞ்சிக்குடி மக்களின் நலனை முன்னிறுத்தி எதிர்காலத்தில் மேலும் பல அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.

ரூபா. 2 மில்லியன் செலவில் களுவாஞ்சிக்குடி சக்கடத்தார் வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்