கால்வாயில் விழுந்து 2 வயது குழந்தை பரிதாப உயிரிழப்பு!
அநுராதபுரம், கல்னேவ பகுதியில் வீட்டிலிருந்து காணாமல் போன இரண்டு வயது ஆண் குழந்தை, வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாயில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளது.
அநுராதபுரம், கல்னேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலேவெல வீதியில் உள்ள கால்வாயில் விழுந்து இரண்டு வயது ஆண் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வீட்டில் இருந்த குழந்தையை காணவில்லை என தந்தை வழங்கிய முறைப்பாட்டையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து குழந்தையை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாயின் பாலத்தில் குழந்தை சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக கல்னேவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் கல்னேவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்னேவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.