நீர்கொழும்பில் கொடூர விபத்து: 2 இளைஞர்கள் பலி – அதிர்ச்சி CCTV காட்சிகள் வெளியீடு!
நீர்கொழும்பு – மீகமுவ வீதியில் அதிவேகத்தில் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். சம்பவத்தின் CCTV காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் விபத்தில் தொடர்புடைய பிரைம் மூவர் வாகனத்திற்கு தீ வைத்தனர்.
நீர்கொழும்பு – மீகமுவ பிரதான வீதியின் பொலவத்த – கட்டான பகுதியில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற கொடூரமான வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதிவேகத்தில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளான இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
விபத்தில் உயிரிழந்த இளைஞர்களின் மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரைம் மூவர் வாகனத்திற்கு ஆத்திரமடைந்த பொதுமக்கள் தீ வைத்தனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற நீர்கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் படையினரும் கட்டான பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் விபத்தின் தன்மை குறித்து முக்கிய ஆதாரமாக கருதப்படுகின்றன.