2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: தேசிய அடையாள அட்டை இல்லாத மாணவர்களுக்கு விசேட சலுகை

தேசிய அடையாள அட்டை இல்லாத 2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பதாரர்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி பரீட்சைக்கு பதிவு செய்ய முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: தேசிய அடையாள அட்டை இல்லாத மாணவர்களுக்கு விசேட சலுகை

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு விசேட வசதி ஒன்றை பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ளது.

அதன்படி, தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்கள் தங்களின் பெற்றோர் அல்லது சட்டபூர்வ பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி பரீட்சைக்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக வழிகாட்டல்கள் மற்றும் நடைமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் நோக்கிலேயே இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு பாடசாலை அதிபர்கள் மற்றும் விண்ணப்பதாரர்களிடம் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: தேசிய அடையாள அட்டை இல்லாத மாணவர்களுக்கு விசேட சலுகை