2026 மூன்றாம் தவணை விடுமுறை அறிவிப்பு: ஆகஸ்ட் 7 முதல் சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை
2026ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுசரணை தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதலாம் கட்டம் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் 7ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. முஸ்லிம் பாடசாலைகளுக்கு செப்டம்பர் 2ஆம் திகதி வரை வகுப்புகள் நடைபெறும். அனைத்து பாடசாலைகளும் செப்டம்பர் 7ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகி, மூன்றாம் தவணை டிசம்பர் 4ஆம் திகதி நிறைவடையும்.
2026ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதலாம் கட்டம் ஆகஸ்ட் 7ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. அதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் கட்டம் செப்டம்பர் 2ஆம் திகதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும். 2026 கல்வியாண்டிற்கான மூன்றாம் தவணை டிசம்பர் 4ஆம் திகதியுடன் நிறைவடையும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர்தர) பரீட்சை ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.