கிளிநொச்சியில் இரு லொறிகள் மோதி விபத்து – 21 வயது இளைஞன் பலி

கிளிநொச்சி தொண்டமாநகர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் இரு லொறிகள் மோதிய விபத்தில் 21 வயதான லொறி உதவியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியில் இரு லொறிகள் மோதி விபத்து – 21 வயது இளைஞன் பலி

கிளிநொச்சி தொண்டமாநகர் பகுதியில் இன்று (12) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் 21 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பாரவூர்திகள் முன்னும் பின்னுமாக பயணித்துள்ளன. முன்னால் சென்ற லொறி பொருட்களை இறக்குவதற்காக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பின்னால் வந்த லொறி அதன் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் லொறியின் உதவியாளரான 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் இரு லொறிகள் மோதி விபத்து – 21 வயது இளைஞன் பலி