கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து – 22 வயது இளைஞன் உயிரிழப்பு
கிளிநொச்சி உருத்திரபுரம் D7 பகுதியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பனை மரத்துடன் மோதியதில் 22 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் நேற்று (04) மதியம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உருத்திரபுரம் இந்துக் கல்லூரிக்கு அருகில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த பனை மரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.