உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: செப்டம்பர் 22ஆம் திகதி தீர்ப்பு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில் 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 24 பிரதிவாதிகளும் தமது எழுத்துமூல வாதங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ஆம் திகதி அறிவிக்கப்படும் என மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: செப்டம்பர் 22ஆம் திகதி தீர்ப்பு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள 24 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணை நிறைவடைந்துள்ளது.

கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையின்போது, பிரதிவாதிகள் சார்பில் எழுத்துமூல வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நவ்பர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எழுத்துமூல வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு 2026 செப்டம்பர் 22ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: செப்டம்பர் 22ஆம் திகதி தீர்ப்பு!