கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு!
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று (03) இரவு 8.00 மணி முதல் நாளை (04) இரவு 8.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, ராவதாவத்தை, சொய்சாபுரம், அங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடஉயன மற்றும் கட்டுக்குருந்த உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.
மேலும், செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.