24 மணி நேரத்தில் 3 டெங்கு மரணங்கள் : மொத்த உயிரிழப்பு 53; நோயாளர்கள் 75 ஆயிரத்தை நெருங்கினர்

கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு காய்ச்சலால் 3 பேர் உயிரிழந்துள்ளதால், இந்த ஆண்டின் மொத்த டெங்கு மரணங்கள் 53 ஆக உயர்ந்துள்ளன. இதுவரை 74,478 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், ஜூலை மாதத்தின் முதல் 17 நாட்களிலேயே 19,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலும், குறிப்பாக கம்பஹா மாவட்டத்திலும் பதிவாகியுள்ளனர்.

24 மணி நேரத்தில் 3 டெங்கு மரணங்கள் : மொத்த உயிரிழப்பு 53; நோயாளர்கள் 75 ஆயிரத்தை நெருங்கினர்

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டில் பதிவான மொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளை, நேற்று (17) வரையிலான தரவுகளின்படி, இந்த ஆண்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 74,478 ஆக உயர்ந்துள்ளதுடன், அது 75 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

ஜூலை மாதத்தின் முதல் 17 நாட்களுக்குள் மட்டும் 19,100 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருப்பது நோய் பரவல் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதை காட்டுகிறது.

மேலும், வழக்கம்போல் மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர். குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் மட்டும் 15,596 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.

24 மணி நேரத்தில் 3 டெங்கு மரணங்கள் : மொத்த உயிரிழப்பு 53; நோயாளர்கள் 75 ஆயிரத்தை நெருங்கினர்