டெங்கு அபாயம் தீவிரம்: 24 மணிநேரத்தில் 597 புதிய தொற்றுகள் – இன்று முதல் விசேட ஒழிப்பு நடவடிக்கை

கடந்த 24 மணித்தியாலங்களில் 597 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், இந்த ஆண்டில் மொத்த பாதிப்பு 68,672 ஆகவும் உயிரிழப்பு 47 ஆகவும் உயர்ந்துள்ளது. டெங்கு அதிகம் காணப்படும் 60 வலயங்களில் இன்று முதல் விசேட ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

டெங்கு அபாயம் தீவிரம்: 24 மணிநேரத்தில் 597 புதிய தொற்றுகள் – இன்று முதல் விசேட ஒழிப்பு நடவடிக்கை

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் 597 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் மொத்தமாக 68,672 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அதிக அபாயம் காணப்படும் 60 வலயங்களை மையமாகக் கொண்டு இன்று (13) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஜனாதிபதி செயலகத்தின் Clean Sri Lanka திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பதில் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களை நுளம்புக்கடியிலிருந்து பாதுகாக்கும் வகையில், வழக்கமான சீருடைக்கு மேலாக கைகளையும் கால்களையும் முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வர அனுமதிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ அறிவுறுத்தியுள்ளார்.

டெங்கு அபாயம் தீவிரம்: 24 மணிநேரத்தில் 597 புதிய தொற்றுகள் – இன்று முதல் விசேட ஒழிப்பு நடவடிக்கை