ஐந்து கொலை வழக்கு: பிள்ளையான் ஆகஸ்ட் 4 வரை மீண்டும் விளக்கமறியலில்
கிழக்கு மாகாணத்தில் ஐந்து பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேகநபரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் பிரதான சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணை நடைபெற்றபோது, பாதுகாப்பு மற்றும் நடைமுறை காரணங்களைக் கருத்தில் கொண்டு, பிள்ளையான் சிறைச்சாலையிலிருந்து இணையவழி தொழில்நுட்பத்தின் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கு, கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி ஐந்து பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையதாகும். சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID), பிள்ளையான் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராக நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக அவரது விளக்கமறியல் காலம் ஆகஸ்ட் 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.