திருக்கோவிலில் முச்சக்கரவண்டி விபத்து – பெண் உயிரிழப்பு, சிறுவர்கள் உட்பட 4 பேர் காயம்
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் திக்கோவில் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில், மட்டக்களப்பு வவுணதீவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் திக்கோவில் (விநாயகர்புரம்) பகுதியில் இடம்பெற்ற துயரமான முச்சக்கரவண்டி விபத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் பயணித்த சிறுவர்கள் உட்பட மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்திற்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.