கிளிநொச்சி வனப்பகுதியில் விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் என பொய்த் தகவல்: 46 வயது நபர் கைது
கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பிய 46 வயது நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருவதாக சமூக ஊடகங்கள் ஊடாக காணொளி மற்றும் செய்தியாளர் சந்திப்பு மூலம் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (18) கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், பெல்லன்வில – பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் இன்று (19) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இலங்கை தண்டனைச் சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.