மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் கோர விபத்து – குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்

மட்டக்களப்பு செட்டிபாளையம் சித்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகே கார் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் கோர விபத்து – குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்

இன்று (25.07.2026) மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பிரதான வீதியில், சித்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் கார் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.


இந்த விபத்தில் காரில் பயணித்த குழந்தைகள் உட்பட மூவரும், லொறியில் பயணித்த இருவருமாக மொத்தம் 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்தின் தாக்கத்தால் கார் மற்றும் லொறி ஆகிய இரு வாகனங்களும் தலைகீழாகக் கவிழ்ந்துள்ளன. எனினும், இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாதது நிம்மதியளிக்கும் விடயமாகும். சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் கோர விபத்து – குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்