இளைஞர்களின் கனவு மைதானம் உருவாகிறது! செட்டிபாளையத்தில் ரூ.5 மில்லியன் திட்டம் ஆரம்பம்

செட்டிபாளையம் பொது விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.5 மில்லியன் செலவில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. மண்முனை தென்எருவில் பற்று தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அவர்களால் இதன்போது இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது

இளைஞர்களின் கனவு மைதானம் உருவாகிறது! செட்டிபாளையத்தில் ரூ.5 மில்லியன் திட்டம் ஆரம்பம்

செட்டிபாளையம் பொதுவிளையாட்டு மைதானத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் நோக்கில் ரூ.5 மில்லியன் செலவில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.


இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மைதானத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சிறந்த சூழலில் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய வகையில் தேவையான கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன.


இத்திட்டம் நிறைவுபெற்ற பின்னர், செட்டிவாலேயம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளின் இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும், விளையாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளைஞர்களின் கனவு மைதானம் உருவாகிறது! செட்டிபாளையத்தில் ரூ.5 மில்லியன் திட்டம் ஆரம்பம்