மஹர சிறைச்சாலையில் பதற்றம் – தீ விபத்து; 5 கைதிகள் காயம், ராகம வைத்தியசாலையில் அனுமதி

மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டதுடன், சிறைச்சாலைக்குள் உள்ள கட்டிடமொன்றில் தீ விபத்தும் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் 5 கைதிகள் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் மேலதிக சிறைச்சாலை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மஹர சிறைச்சாலையில் பதற்றம் – தீ விபத்து; 5 கைதிகள் காயம், ராகம வைத்தியசாலையில் அனுமதி

மஹர சிறைச்சாலையில் இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பதற்றத்தின் போது சிறைச்சாலைக்குள் உள்ள கட்டிடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மொத்தம் 5 கைதிகள் காயமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் உடனடியாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிலைமையை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மேலதிக சிறைச்சாலை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவத்திற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை ஆரம்பகட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.



மஹர சிறைச்சாலையில் பதற்றம் – தீ விபத்து; 5 கைதிகள் காயம், ராகம வைத்தியசாலையில் அனுமதி