மரத்தில் இருந்து தவறி விழுந்து 52 வயது நபர் உயிரிழப்பு
பொகவந்தலாவ கேக்கஷோல் தோட்டத்தில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 52 வயதுடைய நபர் ஒருவர் மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேக்கஷோல் தோட்ட கீழ் பிரிவில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 52 வயதுடைய நபர் ஒருவர் மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், ஹங்குராங்கெத்த – ஹேவாஹெட்ட பகுதியைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார்.
மரத்தில் ஏறி கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது தவறி விழுந்து படுகாயமடைந்த அவர், பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பரிசோதனையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.