தியவன்ன ஓயாவில் விழுந்த 59 வயது பெண் கடற்படையினரால் மீட்பு

பத்தரமுல்லை சந்தூன் உயன பகுதியில் உள்ள தியவன்ன ஓயாவில் தவறி விழுந்த 59 வயதுடைய பெண் ஒருவர், இலங்கை கடற்படையின் உயிர்காக்கும் குழுவினரால் இன்று (24) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

தியவன்ன ஓயாவில் விழுந்த 59 வயது பெண் கடற்படையினரால் மீட்பு

பத்தரமுல்லை சந்தூன் உயன பகுதியில் உள்ள தியவன்ன ஓயாவில் 59 வயதுடைய பெண் ஒருவர் இன்று (24) தவறி விழுந்து ஆபத்தான நிலையில் சிக்கியுள்ளார்.

இதனை அவதானித்த இலங்கை கடற்படையின் உயிர்காக்கும் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நீரில் சிக்கியிருந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

கடற்படை உயிர்காக்கும் வீரர்களின் துரிதமான நடவடிக்கையினால் குறித்த பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியவன்ன ஓயாவில் விழுந்த 59 வயது பெண் கடற்படையினரால் மீட்பு