பெருவில் அடுத்தடுத்த இரட்டை நிலநடுக்கம் : 6 பேர் உயிரிழப்பு, பல வீடுகள் இடிந்து சேதம்
தென் அமெரிக்க நாடான பெருவில் ஏற்பட்ட 5.1 மற்றும் 3.7 ரிச்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்களில் 6 பேர் உயிரிழந்ததுடன், 21 பேர் காயமடைந்துள்ளனர். பல வீடுகள் சேதமடைந்து, 48க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக இடிந்துள்ளன.
தென் அமெரிக்க நாடான பெருவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. ரிச்டர் அளவுகோலில் 5.1 மற்றும் 3.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கங்களால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த இயற்கை அனர்த்தத்தால் குறைந்தது 18 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், மண் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட 48க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் சேத மதிப்பீட்டு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.