எல் நினோ தாக்கம்: 7 மாவட்டங்களில் 81,865 பேர் பாதிப்பு

எல் நினோ தாக்கத்தால் இலங்கையின் 7 மாவட்டங்களில் உள்ள 23 பிரதேச செயலகப் பிரிவுகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. 25,628 குடும்பங்களைச் சேர்ந்த 81,865 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 பேருக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எல் நினோ தாக்கம்: 7 மாவட்டங்களில் 81,865 பேர் பாதிப்பு

எல் நினோ தாக்கம் காரணமாக இலங்கையின் 7 மாவட்டங்களில் வறட்சியான காலநிலை நிலவி வருவதால், 23 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


இதனால் 25,628 குடும்பங்களைச் சேர்ந்த 81,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 பேருக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதில், மொனராகலை மாவட்டத்தில் 7 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 10,264 குடும்பங்களின் 33,023 பேருக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 9,547 குடும்பங்களின் 28,523 பேருக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மேலும், அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள 2 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 2,537 குடும்பங்களின் 7,882 பேருக்கும் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

எல் நினோ தாக்கம்: 7 மாவட்டங்களில் 81,865 பேர் பாதிப்பு