பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு – 75 மி.மீ.க்கும் அதிகமாக மழை பெய்யலாம்
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களுடன் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் 75 மி.மீ.க்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று (28) மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மி.மீ.க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.