ரூ. 76 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிப் பொருட்கள் 400 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன
மண்முனைதென்னெருவில்ப்பட்டு பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில், ரூ. 76 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிப் பொருட்கள் 400 பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு களுவாஞ்சிக்குடியில் வழங்கப்பட்டன.
மண்முனைதென்னெருவில்ப்பட்டு பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அவர்களின் தலைமையில், ரூ. 76 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிப் பொருட்கள் இன்று 400 பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு களுவாஞ்சிக்குடி சீமோர் ராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பிரதேச சபையின் பிரதி தவிசாளரும் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இடியப்பம் தயாரிக்கும் சட்டி, இடியப்ப ஊரல், அரைக்கும் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட தொழில் மற்றும் சுயதொழில் மேம்பாட்டிற்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.
உதவிகளைபெற்ற மக்கள், இத்திட்டத்தை முன்னெடுத்த தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அவர்களுக்கு தங்களது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.