களுவாஞ்சிகுடியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை – 8 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
இன்று (03.08.2026) களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. டெங்கு நுளம்பு பெருகும் சூழலை ஏற்படுத்தியதும், நுளம்புக் குடம்பிகளை வைத்திருந்ததுமான 8 பேருக்கு எதிராக களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (03.08.2026) திங்கட்கிழமை களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் (PHI) பிரிவில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையில் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலக உத்தியோகத்தர்கள், இலங்கை இராணுவத்தினர், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் இணைந்து பங்கேற்றனர்.
வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்கள் பரிசோதிக்கப்பட்டபோது, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சூழல் காணப்பட்டதுடன், டெங்கு நுளம்புக் குடம்பிகளை வைத்திருந்த 8 பேருக்கு எதிராக களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகரால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக பராமரிக்கவும், நுளம்புகள் பெருகக்கூடிய நீர் தேங்கும் இடங்களை உடனடியாக அகற்றவும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ச்சியாக இதுபோன்ற விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.