கண்ணகை அம்மன் ஆலயத்தில் திருடப்பட்ட ரூ.8 இலட்சம் மோட்டார் சைக்கிள் மீட்பு – இலக்கத்தகட்டை மாற்றி தப்பிய 25 வயது இளைஞர் கைது!
களுவாஞ்சிக்குடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் இருந்து திருடப்பட்ட ரூ.8 இலட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை, இலக்கத்தகட்டை மாற்றி கதிர்காமம் நோக்கி சென்ற 25 வயது சந்தேகநபரை பாணமையில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களுவாஞ்சிக்குடி கண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் இருந்து திருடப்பட்ட ரூ.8 இலட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் மூலம், திருட்டு சம்பவம் இடம்பெற்ற ஒரிரு நாட்களுக்குள் 25 வயதுடைய சந்தேகநபர் பாணமை பகுதியில் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளில், திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டை மாற்றிய பின்னர் அதனை கதிர்காமம் நோக்கி எடுத்துச் சென்றபோது பொலிஸார் அவரை மடக்கிப் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.