இன்று பல பகுதிகளில் மழை; பலத்த காற்று வீசக்கூடும்

மேல், சப்ரகமுவ மாகாணங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில மாவட்டங்களில் பிற்பகலுக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளது.

இன்று பல பகுதிகளில் மழை; பலத்த காற்று வீசக்கூடும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், மன்னார், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மணிக்கு 30–40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று பல பகுதிகளில் மழை; பலத்த காற்று வீசக்கூடும்