அதிக வெப்பம்: பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர் அவதானம் அவசியம்!

நாட்டில் நிலவும் அதிக வெப்பமான வானிலை மற்றும் பாடசாலை விடுமுறையைக் கருத்தில் கொண்டு, பிள்ளைகளுக்கு நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.

அதிக வெப்பம்: பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர் அவதானம் அவசியம்!

தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தில் பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பம் காரணமாக பிள்ளைகள் நீரிழப்புக்கு உள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளதுடன், நீண்ட நேரம் வெயிலில் விளையாடுவது உடலுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். தலைவலி, வாந்தி, உடல் வலி, மயக்கம், அசௌகரியம், பசியின்மை மற்றும் அடர் நிற சிறுநீர் ஆகியவை நீரிழப்பின் ஆரம்ப அறிகுறிகளாகும்.

எனவே, பிள்ளைகளுக்கு போதுமான அளவு நீர், இளநீர், ஜீவனி, இயற்கை பழச்சாறுகள், கஞ்சி மற்றும் சூப் போன்ற திரவ உணவுகளை வழங்க வேண்டும் என வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் பருத்தி ஆடைகள் மற்றும் தொப்பி அணிவித்தல், மர நிழல் போன்ற குளிர்ச்சியான இடங்களில் ஓய்வெடுக்கச் செய்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் பெற்றோரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிக வெப்பம்: பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர் அவதானம் அவசியம்!