மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு – கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் பலி
கொழும்பு மாளிகாவத்தை சங்கராஜ மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு, மாளிகாவத்தை சங்கராஜ மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவராகக் கூறப்படும் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.