மனைவியின் பட்டமளிப்புக்கு சென்ற கணவர் விபத்தில் பலி – மைத்துனரும் உயிரிழப்பு

மகியங்கனையில் மனைவியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கச் சென்ற 31 வயது கணவரும், அவருடன் பயணித்த 23 வயது மைத்துனரும் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளனர். ஓட்டுநருக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக வாகனம் மின்கம்பத்தில் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவியின் பட்டமளிப்புக்கு சென்ற கணவர் விபத்தில் பலி – மைத்துனரும் உயிரிழப்பு

மகியங்கனை – பதியதலாவ பிரதான வீதியின் தம்பான 54ஆம் மைல்கல் பகுதியில் கடந்த 24ஆம் திகதி முற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

31 வயதுடைய திருமணமான ஒருவரும், அவரது மனைவியின் 23 வயதுடைய தம்பியும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, ஓட்டுநருக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக வாகனம் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மகியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் மனைவி ஒலுவில் பல்கலைக்கழக பட்டதாரி என்பதுடன், கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற அவரது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கச் செல்லும் வழியிலேயே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவரின் மரணங்கள் தொடர்பான விசாரணைகள் மகியங்கனை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்டுள்ளன.

மனைவியின் பட்டமளிப்புக்கு சென்ற கணவர் விபத்தில் பலி – மைத்துனரும் உயிரிழப்பு