இலங்கையில் முதல்முறையாக களுவாஞ்சிகுடியில் மோட்டார் சைக்கிள்களுக்கு தனிப் பாதை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு

இலங்கையில் முதன்முறையாக மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே பயணிக்கும் தனிப்பாதையை களுவாஞ்சிக்குடியில் அமைக்கும் முன்னோடி திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். வீதி விபத்துகளை குறைத்து, மோட்டார் சைக்கிள் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.

இலங்கையில் முதல்முறையாக களுவாஞ்சிகுடியில் மோட்டார் சைக்கிள்களுக்கு தனிப் பாதை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு

இலங்கையில் முதன்முறையாக மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே பயணிக்கும் தனிப்பாதை அமைக்கும் முன்னோடி திட்டம் களுவாஞ்சிக்குடியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

2026 ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், இலங்கையில் இதுவரை மோட்டார் சைக்கிள்களுக்கென தனியான வீதி அமைக்கப்படவில்லை என்றும், மலேசியா உள்ளிட்ட சில நாடுகளில் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ள இந்த முறை தற்போது இலங்கையிலும் எதிர் வரும் மூன்று மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தபடும் எனவும் தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசல் அதிகமாகவும், மோட்டார் சைக்கிள்களின் பயன்பாடு அதிகமாகவும் உள்ள பகுதியாக களுவாஞ்சிகுடி அடையாளம் காணப்பட்டதால், இந்த முன்னோடி திட்டத்திற்காக அந்தப் பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டம், வீதி விபத்துகளால் உயிரிழப்புகள் மற்றும் கடுமையான காயங்களை குறைப்பதுடன், மோட்டார் சைக்கிள் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, இலங்கையில் தினசரி பதிவாகும் வீதி விபத்துகளில் மோட்டார் சைக்கிள் பயணிகளே அதிகளவில் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு பாதுகாப்பான பயண சூழலை உருவாக்குவது அவசியம் என அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும், இந்த முன்னோடி திட்டம் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், நாட்டின் பிற பகுதிகளுக்கும் இதை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வீதி பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில், 100 மோட்டார் வாகன நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் 100 மோட்டார் சைக்கிள் பயனாளர்களுக்கு வீதி பாதுகாப்பு தொடர்பான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு, வீதி பாதுகாப்பு அதிகாரசபையும் கெய்லிஸ் நிறுவனமும் இணைந்து முன்னெடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

இலங்கையில் முதல்முறையாக களுவாஞ்சிகுடியில் மோட்டார் சைக்கிள்களுக்கு தனிப் பாதை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு