ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஈரோஸ் கட்சித் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

ஓட்டமாவடி காளி கோவில் இடிப்பு, நீதவான் ஒருவரின் இடமாற்றம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சஹ்ரானுடன் தொடர்பு இருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு மற்றும் அரச காணிகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களாக தம்மிடம் உள்ளதாகக் கூறப்படும் ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் எழுத்துமூல தகவல்களையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், 1990ஆம் ஆண்டு முதல் ஹிஸ்புல்லா மேற்கொண்டதாக தாம் கூறும் சில நடவடிக்கைகள் கிழக்கில் தமிழ்–முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உறவைப் பாதித்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!