பால்மா, பால், யோகட் விலை உயர்வு? – சமூக வலைத்தள செய்தி பொய்!

பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பால்மா, பால், யோகட் விலை உயர்வு? – சமூக வலைத்தள செய்தி பொய்!

பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக “BREAKING NEWS” எனக் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளது.


குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விலை அதிகரிப்பு தொடர்பான தகவல்கள் பொய்யானவை என அதிகாரசபை தெரிவித்துள்ளது. எனவே, உறுதிப்படுத்தப்படாத இவ்வாறான செய்திகளை பொதுமக்கள் பகிர்வதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


போலி தகவல்கள் பரவுவதன் மூலம் நுகர்வோர் மத்தியில் தேவையற்ற அச்சமும், சந்தையில் தவறான புரிதல்களும் ஏற்படக்கூடும் என அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.


சந்தேகத்திற்குரிய விலை மாற்றங்கள் அல்லது சந்தை முறைகேடுகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால், 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

பால்மா, பால், யோகட் விலை உயர்வு? – சமூக வலைத்தள செய்தி பொய்!