செம்மணி புதைகுழியில் மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வில் மழை அங்கியும் காலுறையும் அணிந்த நிலையில் சிறுவன் ஒருவரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு சட்டரீதியான அடக்கமா என்ற புதிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 41வது நாளில் மேலும் 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், மழை அங்கி மற்றும் காலுறையுடன் காணப்பட்ட சிறுவன் ஒருவரின் எலும்புக்கூடு விசேட கவனத்தை ஈர்த்துள்ளது. இதுவரை 478 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 464 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்ததாவது, 467வது எலும்புக்கூடு இதற்கு முன் இல்லாத வகையில் சவப்பெட்டியின் அடையாளம், மழை அங்கி மற்றும் காலுறையுடன் காணப்பட்டதால், இது சட்டரீதியாக அடக்கம் செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக நீதிமன்றம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், இன்று (24) கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.