நுரைச்சோலை மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை – மின் உற்பத்தி கட்டுப்பாடு.!

நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளதால் நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் மின் உற்பத்தி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும், போதுமான நீர்மின்சாரம் கிடைப்பதால் மின்சார விநியோகத்தில் தற்போது எந்தப் பாதிப்பும் இல்லை என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை – மின் உற்பத்தி கட்டுப்பாடு.!

நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளதைத் தொடர்ந்து நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் மின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.


எனினும், தற்போது போதுமான அளவு நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், நிலக்கரி மூலமான மின் உற்பத்தி குறைந்துள்ள போதிலும் மின்சார விநியோகத்தில் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.


மேலும், நிலக்கரி ஏற்றிய இரண்டு கப்பல்கள் விரைவில் இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கப்பல் நாளை (04) வரவுள்ளதாகவும், இரண்டாவது கப்பல் செப்டெம்பர் 12ஆம் திகதி வரவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


இரு கப்பல்களிலிருந்தும் நிலக்கரி இறக்கப்பட்ட பின்னர், நுரைச்சோலை மின் நிலையத்தின் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும், நிலைமை குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.


எவ்வாறாயினும், நிலக்கரி கையிருப்பு பற்றாக்குறை நாட்டின் மின் உற்பத்திக்கு கடுமையான சவாலாக அமைந்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜகோடா தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை – மின் உற்பத்தி கட்டுப்பாடு.!