அதிவேக நெடுஞ்சாலைகளின் பல வெளியேறும் இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்
தெற்கு, வெளிவட்ட மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள வெளியேறும் இடம், வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை வெளியேறும் இடம், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம நுழைவு இடம் மற்றும் யக்கபிட்டிய வெளியேறும் இடம் ஆகிய பகுதிகளில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால், குறித்த பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடனும், பாதுகாப்பாகவும் வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.