மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஆறு தமிழ் பேசும் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தல்
ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து விசேட ஊடக சந்திப்பை நடத்தி, மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துதல், புதிய அரசியலமைப்பு உருவாக்குதல் மற்றும் காணி பிரச்சினைக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தின.
கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல், புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் மற்றும் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்குதல் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்