ஏறாவூர் நகர சபையில் பரபரப்பு: “செருப்பால் அடிப்பேன்” என பெண் உறுப்பினர் மிரட்டல்!

ஏறாவூர் நகர சபையின் இன்றைய அமர்வின் போது, அனைத்து உபகுழுக்களிலும் தன்னை இணைக்க வேண்டும் என கோரிய ஐக்கிய தேசியக் கட்சியின் பெண் உறுப்பினர், அதற்கு சாதகமான பதில் வழங்காத நிதிக் குழுத் தலைவரை "செருப்பால் அடிப்பேன்" என மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏறாவூர் நகர சபையில் பரபரப்பு: “செருப்பால் அடிப்பேன்” என பெண் உறுப்பினர் மிரட்டல்!

ஏறாவூர் நகர சபையின் இன்றைய அமர்வின்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பெண் நகர சபை உறுப்பினர், நகர சபையின் அனைத்து உபகுழுக்களிலும் தன்னை உறுப்பினராக இணைக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.

எனினும், அந்தக் கோரிக்கைக்கு நிதிக் குழுத் தலைவர் சாதகமான பதிலை வழங்காத நிலையில், குறித்த பெண் உறுப்பினர் அவரை நோக்கி "செருப்பால் அடிப்பேன்" என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் நகர சபை அமர்வில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலையும் நிலவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏறாவூர் நகர சபையில் பரபரப்பு: “செருப்பால் அடிப்பேன்” என பெண் உறுப்பினர் மிரட்டல்!