வரி செலுத்தாத மதுபான நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை!
வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நிலுவை வரிகளை வசூலிக்க மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நிலுவையில் உள்ள வரிகளை அறவிடுவதற்காக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (20) உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, வரி செலுத்தாத மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நிலுவை வரிகளை வசூலிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், குறித்த நிறுவனங்களுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்தார். இந்த நடவடிக்கையின் மூலம் அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவை வரிகளை சட்டரீதியாக வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.