பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நாடளாவிய தொடர் போராட்டம்
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நிர்வாகப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நிர்வாகத்திற்கு வழங்க வேண்டிய அனைத்து தரவுகள் மற்றும் அறிக்கைகளையும் வழங்குவதை நிறுத்தியுள்ளனர்.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயற்குழு தீர்மானத்திற்கமைய, இன்று (24) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் பணியாற்றும் அனைத்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நிர்வாகப் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் நிர்வாகத்திற்கு வழங்கும் அனைத்து வகையான தரவுகள், அறிக்கைகள் உள்ளிட்ட தகவல்களை வழங்குவதை முற்றாக இடைநிறுத்தியுள்ளனர்.
சங்கத்தின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.