கண்டி பெரஹெரா கடமையில் பொலிஸாரை அவமதித்த நபர் கைது
கண்டி எசல பெரஹெரா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளை அவதூறான வார்த்தைகளால் திட்டி, அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் இன்று (23) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி எசல பெரஹெராவுடன் தொடர்புடைய பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளை அவதூறான வார்த்தைகளால் திட்டி, அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீ தலதா மாளிகையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பாதுகாப்புப் பணிக்காக பொலிஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று (23) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டு, பொலிஸ் அதிகாரிகளை அவதூறான வார்த்தைகளால் திட்டியதுடன், அவர்கள் தமது கடமைகளைச் செய்வதற்கும் இடையூறு விளைவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.