பொதுஹெரவில் ரயில் தடம் புரண்டது – வடக்கு ரயில் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிப்பு

பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த ரயில், பொதுஹெர ரயில் நிலையத்தில் தடம் புரண்டதால் வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுஹெர வழியாக செல்லும் ரயில்கள் தாமதமாகும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுஹெரவில் ரயில் தடம் புரண்டது – வடக்கு ரயில் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிப்பு

பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த ரயில் ஒன்று இன்று பொதுஹெர ரயில் நிலையத்தில் வைத்து தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தடம் புரண்ட ரயிலை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், பொதுஹெர ரயில் நிலையத்தைக் கடந்து பயணிக்க வேண்டிய அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பொதுஹெரவில் ரயில் தடம் புரண்டது – வடக்கு ரயில் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிப்பு