முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன் காலமானார்
துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் தமக்குத் தாமே துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர் தமக்குத் தாமே துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
1986ஆம் ஆண்டு உதவி பயிற்சி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்த அவர், 34 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட அவர், பின்னர் நாட்டின் 35வது பொலிஸ் மா அதிபராக பொறுப்பேற்றார். 2023 நவம்பர் 25ஆம் தேதி உத்தியோகபூர்வமாக ஓய்வுபெற்றிருந்தார். அவரது உயிரிழப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.