எம்.பி. அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவரைக் கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்துள்ளது.

எம்.பி. அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்துள்ளது.

கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அர்ச்சுனா இராமநாதன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மேலும், அவருக்காக பிணையளித்தவர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இந்த நிலையில், குறித்த வழக்கின் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

எம்.பி. அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு