ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமித்புர சது’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு மூலம் தேடப்பட்டு வந்த ‘சமித்புர சது’ எனப்படும் திமுத்து சதுரங்க ஓமானில் கைது செய்யப்பட்டு இன்று (18) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமித்புர சது’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த ‘சமித்புர சது’ அல்லது ‘மோதரை சது’ என அழைக்கப்படும் திமுத்து சதுரங்க ஓமானில் கைது செய்யப்பட்டு இன்று (18) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

மட்டக்குளி, சமித்புர பகுதியைச் சேர்ந்த இவர், 2025 மார்ச் 22ஆம் திகதி போலியான வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஓமானுக்குத் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட குற்றக் குழுவுடன் தொடர்புடையவராகவும், பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளில் தேடப்பட்டு வந்தவராகவும் அவர் குறிப்பிடப்படுகிறார்.

ஓமானின் மஸ்கட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், பலத்த பாதுகாப்புடன் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஓமானில் கைது செய்யப்பட்ட ‘சமித்புர சது’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்