மட்டக்களப்பு சிறையில் இளைஞர் தற்கொலை முயற்சி..
மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞர் ஒருவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். படுகாயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று (07) செவ்வாய்க்கிழமை பிற்பகல் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இன்று பிற்பகல் சுமார் 12.00 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.