காணாமல் போன பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நிலையில், மஹியங்கனை–மாப்பாக்கடவெவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல் போன பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு

பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் விசேட வைத்தியர் ஒருவர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த பின்னர் காணாமல் போயுள்ளார்.

அவரது கார் மஹியங்கனை திசையை நோக்கிச் சென்றமை மீகஹகிவுல பகுதியில் உள்ள CCTV காணொளி மூலம் தெரியவந்துள்ளது. பின்னர், பதுளை–மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்து அவரது கார் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பொலிஸார், தடயவியல் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், மஹியங்கனை–மாப்பாக்கடவெவ பகுதிக்கு அருகிலுள்ள பாறையொன்றில் இருந்து குறித்த வைத்தியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காணாமல் போன பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு